இலங்கையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 382 ஆக உயர்வு!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. ஹோமாகம ஆதார வைத்தியசாலையிலிருந்து 7 பேரும், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையிலிருந்து 6 பேரும், கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையிலிருந்து 2 பேரும் மற்றும் தேசிய தொற்று…

Read More

பாக். முன்னாள் ஜனாதிபதி முஷாரப்புக்கு தூக்கு தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரபுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தேசதுரோக வழக்கில் பாகிஸ்தான் பெஷாவர் நீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது. 2007ம் ஆண்டு அவசர நிலை பிரகடனம் செய்ததற்கு எதிராகவே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டது முஷாரப் உடல்நிலை மோசமடைந்ததால் துபாய் மருத்துவமனையில் தற்போது சிகிச்சையில் எடுத்து வருகிறார்.


வெளிநாடு செல்ல தடை!

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க மற்றும் அவரது வாகன ஓட்டுனருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்து ஒன்று தொடர்பில் இவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில்


ஐ.நா பொதுச்செயலாளர் பதவிக்கு ரணில்?

ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் பதவிக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக ஆங்கில ஊடகமொன்று வெளியிட்ட செய்தியை முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க உண்மையென உறுதிப்படுத்தினார். பரிந்துரை வந்தபோதிலும் அந்த பதவியில் அமர்வதா?இல்லையா?என்பது தொடர்பில் ரணில் பரிசீலனை செய்து வாருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


113 ஆசனங்களை இலக்காக கொண்டு சஜித்துடன் இணைந்து செயற்படுங்கள்- ரணில்

ஜனாதிபதி தேர்தலில் கிடைக்கபெற்ற வாக்குகளின் பிரகாரம் 105 ஆசனங்களை பாராளுமன்ற தேர்தலில் பெறமுடியும்.எனவே எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை நியமித்துள்ளோம். எனவே அவருடன் இணைந்து ஜனவரி 3 ஆம் திகதியில் இருந்து ஆர்வத்துடான் 113 ஆசனங்களை இலக்காக கொண்டு செயற்படவேண்டும். புதிய தலைமைகளுடன் கட்சியை முன்கொண்டு செல்வோம் என…


நீர் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்- அமைச்சர் வாசு

நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார தௌிவுபடுத்தியுள்ளார். நீர்கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே இராஜாங்க அமைச்சர் இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார். அதிகமாக நீரை விரயமாக்கும், அதிக வருமானம் பெறும் குடும்பங்களின் நீர்விநியோகக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் இராஜாங்க…


பால்மாவுடன் தொலைபேசி கட்டணமும் குறைகிறது

பால்மா 1 கிலோ பக்கறின் விலை 40 ரூபாவினாலும் 400 கிராம் பால்மா பக்கற் 15 ரூபாவினாலும் குறைகிறது. இன்று நள்ளிரவில் இருந்து பால்மா விலை குறைக்கப்படுகின்றது. அத்துடன் தொலைதொடர்பு வரி குறைக்கப்பட்டமை அடுத்து தொலைபேசி கட்டணமும் குறைக்கப்படவுள்ளதாக தொலைதொடர்பு மேற்பார்வை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதன்படி முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு…


ஜனாதிபதி-பிரதமருக்கு இடையில் பிரச்சினை வெடிக்கும் நிலை ஏற்படும் – கூட்டமைப்பு

19 ஆவது அதிகாரத்தை இல்லாதொழிக்க முயற்சிகளை முன்னெடுத்தால் ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் பிரச்சினைகள் வெடிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ 19 ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்றுகூறி, அதனை செயற்படுத்துவாராக இருந்தால் பிரதமரின் அதிகாரங்கள் குறைக்கப்படும். அதற்கு தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…


கட­வுச்­சீட்டு படம் எடுக்கையில் நெற்றிப் பொட்டை அகற்ற வேண்டும்-குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம்

புதி­தாக கட­வுச்­சீட்­டுக்கு விண்­ணப்­பிப்­ப­வர்கள் அல்­லது தமது பழைய கட­வுச்­சீட்டை புதுப்­பிக்கும் தமிழ்ப் பெண்கள் நெற்­றிப்­பொட்­டுடன் படம் எடுப்­பதை தவிர்க்க வேண்டும் என குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. இது தொடர்­பாக தமிழ்ப்­பெண்­க­ளி­ட­மி­ருந்து வந்த தொடர்ச்­சி­யான முறைப்­பா­டு­க­ளை­ய­டுத்து மேற்­படி திணைக்­க­ளத்­திடம் கேட்­கப்­பட்ட போதே அதன் ஊட­கப்­பேச்­சாளர் பி.ஜி.ஜி.மிலிந்த இத்­த­க­வலை தெரி­வித்தார்….


எதிர்க்கட்சி தலைவரை பெயரிடாமல் சபாநாயகர் காலம் தாழ்த்துவது தவறு- திஸ்ஸ

பெரும்பாண்மை மற்றும் ஏகமனதாக முடிவிற்கமைய எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேதாச தெரிவு செய்யப்பட்டுள்ளதை சபாநாயகர் ஏற்றுக் கொண்டுள்ளார். எனினும் சம்பிரதாயங்களைக் காரணம் காட்டி சஜித் பிரேதாசவை எதிர்க்கட்சி தலைவராக உத்தியோகபூர்வமாக அறிவிக்காமல் காலம் தாழ்த்தினால் அது தவறான செயற்பாடு என்று ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர்…