இலங்கையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 382 ஆக உயர்வு!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

ஹோமாகம ஆதார வைத்தியசாலையிலிருந்து 7 பேரும், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையிலிருந்து 6 பேரும், கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையிலிருந்து 2 பேரும் மற்றும் தேசிய தொற்று நோய் வைத்தியசாலையிலிருந்து ஒருவரும் இவ்வாறு குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 382 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றைய தினம் 20 பேர் புதிய கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

அதில் 17 பேர் வெலிசர கடற்படை தளத்துடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன் மேலும் மூவர் அவர்களது சகாக்களும் ஆவார். மற்றைய டுபாயிலிருந்து திரும்பி வந்து கண்டகாடு தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் உள்ளவர் ஆவார்.

மொத்தமாக நாட்டில் 889 பேர் கொரோனா தொற்றாளர்காளக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுள் 454 பேர் கடற்படை வீரர்கள் ஆவர். அத்துடன் மேலும் 34 பேர் அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள்.

தற்போது 498 கொரோனா தொற்றாளர்கள் நாடு முழுவதும் உள்ள ஏழு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதன்படி 216 பேர் கடற்படை வைத்தியசாலையிலும், 111 பேர் தேசிய தொற்று நோய் வைத்தியசாலையிலும், 81 பேர் கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையிலும், 44 பேர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையிலும், 37 பேர் வெலிகந்தை ஆதார வைத்தியசாலையிலும், 8 பேர் இரனவில வைத்தியசாலையிலும், ஒருவர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையிலும் இவ்வாறு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் மேலும் 105 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதுடன், 09 உயிரிழப்பு சம்பவங்களும் இதுவரை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Be the first to comment on "இலங்கையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 382 ஆக உயர்வு!"

Leave a comment

Your email address will not be published.


*